
திருநாவுக்கரசர் அறக்கட்டளை · நாகர்கோவில்
பதிவு எண்: 264/2024உழவாரம் என்பது கோயில் வளாகத்தில் புல், செடிகளை அகற்றப் பயன்படும் சிறிய கருவி. திருநாவுக்கரசர் (அப்பர் பெருமான்) இதையே கையில் ஏந்தி, சிவத்தலங்களைத் தூய்மை செய்து இறைவனைப் பாடினார்.
அந்தப் பாதையில், நாகர்கோவில் அன்பர்கள் ஒன்றுகூடி, ஆலயங்களைத் தூய்மைப்படுத்தும் உழவாரப் பணியை அண்ணாமலையார் திருவருளால் தொடர்ந்து செய்து வருகிறோம்.
இறைவனிடமும் அடியார்களிடமும் எல்லா உயிர்களிடமும் கலப்பற்ற அன்பே எங்கள் பணியின் தொடக்கம்.
தொண்டு செய்வதில் பெருமை இல்லை; பணிவே அதன் அழகு. எல்லோரும் ஒரே குடையின் கீழ் சமமான தொண்டர்கள்.
தூய்மையான திருக்கோயிலைக் காணும்போது பிறக்கும் நிறைவே எங்கள் ஊதியம்.
ஒவ்வொரு உழவாரப் பணியிலும் இவை இடம்பெறும். இடத்துக்கு ஏற்ப மாறுபடலாம்.
நாமார்க்கும் குடியல்லோம்– திருநாவுக்கரசர் தேவாரம்
நமனை அஞ்சோம்
அண்ணாமலையாருக்கு அரோகரா!